மே மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

மே மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

உறுதியான எண்ணம் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு தன ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவதும், உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் சிறப்பான நற்பலன்களைப் பெற்று தரும். சூரியன் ராசியில் உச்சம் பெற்று தனாதிபதியுடன் சம்பந்தம் பெறுவது.உங்களின் அரசியல் பிரவேசம் நன்மையை பெற்று தரும். 
 
அரசு சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனி அமர்ந்து உங்களின் ராசியை பார்ப்பதும் நற்பலன்களையும், தொழில் இல்லாதவருக்கு தொழில் அமைத்து தருவதும். வேலை தேடுபவருக்கு நல்ல வேலையும் அமைய பெறுவீர்கள். கடவுள் மீது அன்பு செலுத்துவீர்கள். 
 
எதையும் கேட்டு பெறாமல் தானே அமையும். உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயலில் தொடர்ந்து இயங்கி வருவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் விரைவில் தீர்வுக்கு வரும். உங்களின் பொருளாதார நிலையில் வளர்ச்சி உண்டாகும். ராசிநாதன் விரயத்தில் அமர்வதால் ஏதாவது அசையாத சொத்து விற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அல்லது நிலத்தில் முதலீடு செய்ய வேண்டிவரும்.
 
ஒரு சிலருக்கு உடல் ரீதியான வைத்தியம் பார்க்க வேண்டிவரும். விளையாட்டு துறையில் சற்று வளர்ச்சியைப் பெறுவீர்கள். சரியான கால கட்டத்தில் ஒரு பணியினை செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் மூலம்.. உடல் அசதி ஏற்பட்டு, உறக்கமின்மை உண்டாகும். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
23.05.2024 வியாழன் அதிகாலை 03.23 முதல் 25.05.2024 சனி பகல் 11.03 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
பிரதோசத்தன்று பிரதோச வழிபாடு செய்து, நந்திக்கு அபிசேகஙப பொருட்களை வாங்கி கொடுத்து, வேண்டிக் கொள்ள சகல காரியமும் சித்தி தரும்.